×

சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

திருப்பூர், பிப். 19:    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பேரூராட்சி 15வது வார்டுக்குட்பட்ட உமையஞ்செட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று செயல் அலுவலர் குணசேகரனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் குறிஞ்சி நகர், சபரி நகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ராக்கியாபாளையம் உமையஞ்செட்டிபாளையம் சாலையில் உள்ள பள்ளத்தில் சென்று நிரம்புகிறது. மேலும் கழிவுநீர் அப்பகுதியில் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  எனவே கழிவுநீர் வெளியேறும் வகையில் சாக்கடை கால்வாய் மற்றும் பாலம் அமைப்பதுடன், சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்று கொண்ட செயல் அலுவலர் குணசேகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : appeals ,bar office ,
× RELATED நீர் சேமிப்பு உள்பட மக்களுக்கு...