×

கூடலூர் தனியார் தேயிலை தொழிலாளர் பிரச்ைனயை ஆய்வு செய்ய ரிசீவர் கமிட்டி

கூடலூர், பிப். 19:கூடலூர் தனியார் தேயிலை தொழிலாளர் பிரச்ைனயை ஆய்வு செய்ய ரிசீவர் கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. தோட்டநிர்வாகம், தொழிலாளர் என இருதரப்பினரின் கூட்டம் சென்னையில் 27ம் தேதி நடக்கிறதுஇதுகுறித்து ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் கூறியதாவது:கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்ல மலை டிவிசனுக்குட்பட்ட சீபுரம் தேயிலைத் தோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் உள்ளிட்ட பணப் பயன்கள்  வழங்கப்படாததால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.  கூடலூர் ஆர்டிஓ தனபால், தொழிலாளர் ஆணையர்  அலுவலர் சிராஜூதீன் தலைமையில் பல சுற்று பேச்சு வார்த்தை நடந்தது.   கடந்த 12-12-2007ல் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தொழிலாளர்களே தோட்டத்தை பராமரித்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் தங்களது சொந்த பணத்தில் தேயிலைத் தோட்டத்தை மேம்படுத்தினர். தோட்டம் சீரமைக்கப்பட்டதால் தேயிலைத் தோட்டத்தில் உற்பத்தி அதிகரித்தது. இந்தநிலையில் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டத்தை  திருப்பி கேட்டுள்ளது. தொழிலாளர்கள் தரப்பில் தோட்டத்தை பராமரிக்க செலவு செய்த ரூ.25 லட்சத்தை திருப்பி தர கேட்டபோது அதற்கு மறுப்பு தெரிவித்த நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ெதாழிலாளர்கள் மீது நியூ ஹோப் காவல்நிலையத்தில்  புகார் அளித்தனர். இதை விசாரித்த காவல்துறையினர் தவறான தகவல் என அறிவித்து புகாரை தள்ளுபடி செய்தனர்.  

 தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததை அடுத்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கூடலூர் சிவில் உரிமை நீதிமன்றத்தில் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த  நீதிபதி தொழிலாளர்களின் அன்றாட வேலைகளில் தலையிட கடந்த 2011ம் ஆண்டில் நிர்வாகத்திற்கு அனுமதி மறுத்தது. இப்பிரச்னை தொடர்பாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் இடையே மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளை தொடர்ந்து நிர்வாகம் உச்ச நீதிமன்றம் செல்ல அங்கும் தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாதிடப்பட்டது. இதில் கடந்த 11-9-2019 அன்று ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒழுங்கு நிலைப்படுத்தும் குழுவை ( ரிசீவர் கமிட்டி) அமைத்தது.  இக்குழு வரும் 27-2-2020 சென்னையில் இருதரப்பு அடங்கிய கூட்டத்தை நடத்த உள்ளது.    இதில் நிர்வாகத் தரப்பு பிரதிநிதியாக லாலு பன்சாலி, தொழிற்சங்க தரப்பு பிரதிநிதியாக ஏஐடியுசி தொழிற்சங்கம் நிர்வாகி பாலகிருஷ்ணன் ஆகியோரை நியமித்துள்ளது. இந்த கமிட்டியின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தனியார் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்காக நீதிமன்றமே முன்வந்து கமிட்டி அமைத்து ஆய்வு செய்வது இதுவே முதல் முறையாகும். இதேபோல் உள்ள மற்ற தோட்ட தொழிலாளர் பிரச்னைகளுக்கு இது முன்மாதியாக அமைந்துள்ளது.

Tags : Receiver Committee ,Cuddalore Private Tea Workers ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி