×

சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 19: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சின்னசாமி, மாநில பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு ஆகிய பணிகளை கைவிட வேண்டும். தமிழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைத்து அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களையும் உறுப்பினராக்க வேண்டும். சர்வதேச அமைப்பின் பரிந்துரைப்படி தொழிலாளர்கள் சுமக்கும் எடையின் அளவு 55 கிலோவிற்குள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பணியிட விபத்துகளில் உயிரிழக்கும் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏஐடியுசி மாவட்ட துணைத்தலைவர் செல்வம், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், ஸ்டாலின் சிவக்குமார், பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,load lifting workers ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்