முதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரை விவகாரம் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை

கோவை, பிப். 19:  கோவை முதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரை தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலை ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பகுதி நேர ஆசிரியர்களை உரிய தகுதி  இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கடந்த 2012ல் நியமனம் செய்தனர். டி.என்.பி.சி. குரூப்-4 நியமனம், டி.ஆர்.பி. சிறப்பாசிரியர்கள் நியமனம் போது போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது கோவையில் முதன்மை கல்வி அலுவலர் முத்திரை தவறுதலாக பயன்பாட்டில் வைத்து மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்  வழங்க பயன்படுத்தி வருகிறார் என சமூக வலைதளம் மூலம்  தகவல்கள் பரவி வருகிறது.முதன்மை கல்வி அலுவலர் முத்திரை  தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பழைய முதன்மை கல்வி அலுவலர்  முத்திரை ஆங்கில எழுத்துக்கள் உடன் உள்ளது. இதனை பயன்பாட்டில் விட்டது மாவட்ட கல்வி அலுவலர்கள் என கூறப்படுகிறது. இந்த  முத்திரை எத்தனை ஆண்டுகளாக தவறுதலாக பயன்பாட்டில்  உள்ளது என புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் முத்திரையை தவறுதலாக பயன்பாட்டில் வைத்த அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த 2017 முதல் 2020 வரை கோவை மாவட்டத்தில் முதன்மை கல்வி  அலுவலர்களாக கணேஷ் மூர்த்தி, முருகன், அய்யண்ணன் என 3  பேர் மாற்றப்பட்டு உள்ளனர். இதில், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் 2 முறை மாற்றப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணி என்ன? என புரியவில்லை. மேலும், பழைய முத்திரையை முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில்  வைக்காமல் புழக்கத்தில் விட்டது தொடர்பாக விசாரணை கமிஷன் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: