காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 19: ஈரோட்டில் காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்தியில் ஆளும் பாஜ தலைமையிலான மோடி அரசு மானியம் இல்லாத காஸ் விலையை 149 ரூபாய் வரையும், மானியத்துடன் கூடிய காஸ் விலையை 153 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் காஸ் சிலிண்டர்களை வைத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஸ் ராஜப்பா, செல்லகுமாரசாமி, சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சித்ரா விஸ்வநாதன், மாநில செயலாளர் கார்த்தீஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், பாட்சா, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பூந்துறை ரோடு மூலப்பாளையம் எல்ஐசி நகர் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். காஸ் விலை உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், தங்கவேல், மாவட்ட பொருளாளர் ரவி, வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார் ஆண்டமுத்துசாமி, பழனிச்சாமி, சர்வேஸ்வரன், இளைஞர் காங்கிரஸ் தளபதி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: