×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கம்பத்தில் 5வது நாளாக போராட்டம்

கம்பம், பிப். 18: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பத்தில் 5வது நாளாக நேற்று முன்தினம் இரவு தொடர் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 11ம் தேதி இரவு கம்பம் பாவலர் திடலில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமிஆ பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்கியதை கண்டித்தும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர். அன்றைய தினம் திமுக மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கடந்த 13ம் தேதி இ.கம்யூ.,மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் 5வது நாளாக பாவலர் படிப்பகம் வாவா திடலில் போராட்டம் தொடர்ந்தது. கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் தலைவர் பாபா பதுருதீன் தலைமை வகித்தார். இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : struggle ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...