மெழுகுவர்த்தி ஏந்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம், பிப்.18: கள்ளிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஓய்வூதியம் கேட்டு ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் கடந்த 35 ஆண்டுகளாக பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தங்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என கூறி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மதுரை கள்ளிக்குடி ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திரண்டு கள்ளிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி தங்களுக்கு பென்ஷன் தொகையை ரூ.2 ஆயிரத்தில் இருந்து குறைந்தபட்ச பென்ஷன் தொகையைான ரூ.7850 வழங்கவேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமையில் கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சத்துணவு, அங்கன்வாடி மற்றும் பாலர்வாடி மையங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். சேடபட்டி: பேரையூர் தாலுகா சேடபட்டி யூனியன் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சேடபட்டி ஒன்றியத்தலைவர் பொன்ராஜ், செயலாளர் செல்லமுத்து ஆகியோர் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தலைவர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார்.  நல்லழகு, ராஜமாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: