புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா

மதுரை, பிப். 18: புதூர் லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவபொங்கல் விழா நடந்தது. மதுரையில் கோ.புதூரில் உளள தூய லூர்தன்னை ஆலயத்தில் நூற்றாண்டு விழா கொடிேயற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வாக நற்கருணை பவனி விழா, தேர்பவனி நடைபெற்றது. தேர் பவனியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித அருளானந்தர், புனித ஜான்போஸ்கோ, லூர்துமாதா காட்சி அளித்தனர்.சந்தன மாதாகோயில் தெரு, மாதாகோயில் மெயின் தெரு, பாரதியார் தெரு வழியாக சுற்றி ஆலயத்தின் நிலையை தேர் வந்தடைந்தது. பின்னர் 100க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்கப்பட்டது. இதையடுத்து சமத்துவ பொங்கல்விழா நடந்தது. இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.பங்கு தந்தை தாஸ்கென்னடி, உதவி பங்கு தந்தையர்கள் ஜான்பால், மரியதாஸ், பிரவின் ஸ்டீபன் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாலையில் கொடி இறக்கப்பட்டு நூற்றாண்டு விழா நிறைவு பெற்றது.

Related Stories: