எல்லீஸ்நகரில் தற்காலிக கடைகள் அமைக்க எதிர்ப்பு விசாரணை தள்ளி வைப்பு

மதுரை, பிப். 18: மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் தற்காலிக கடைகள் வைக்க அனுமதிப் பதற்கு மீனாட்சியம்மன் கோயில் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக பெரியார் பஸ்நிலையம் மற்றும் வணிக வளாக பஸ்ஸ்டாண்ட் ஆகியவை இடிக்கப்பட்டன. இங்கு கடைகள் வைத்திருந்த பலர் தங்களுக்கு மாற்றிடம் வழங்கவும், புதிய வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கவும் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், மதுரை நகரில் உள்ள காலியிடங்களில் கடைகள் ஒதுக்கித் தருமாறு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மதுரை மாவட்டுத்தாவணி, பைபாஸ் ரோடு மற்றும் எல்லீஸ்நகர் உள்ளிட்ட பல இடங்களில் மாற்றிடங்கள் தற்காலிக அடிப்படையில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டன.இதில், மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் ஒதுக்கப் பட்டுள்ள கடைகளால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை, கடந்தாண்டு விசாரித்த நீதிமன்றம், எல்லீஸ்நகர் பகுதியில் தற்காலிக கடைகளுக்கு தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக் கோரி மதுரை பெரியார் பஸ்நிலைய பாரதியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்நிலைய ஒருங்கிணைந்த வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் ராஜாராம் சார்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கூறப்பட்டது. அப்போது வக்கீல் மனோகரன் ஆஜராகி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரப்பில் தங்களையும் இந்த வழக்கில் ேசர்த்துக் ெகாள்ளக் கோரி மனு செய்கிறோம். அதில், கோயிலுக்கு சொந்தமான இடம் எல்லீஸ்நகரில் உள்ளது. இந்த கடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்தப் பகுதியில் தற்காலிக கடைகளுக்கு அனுமதிக்க கூடாது என்றார். இதையடுத்து கோயில் தரப்பிலான மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: