×

பழநி நகராட்சியில் ஊதிய நிர்ணய ஆலோசனை கூட்டம்

பழநி, பிப். 18: பழநி நகராட்சியில் உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக அரசு உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதிலும் உள்ளாட்சி பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி பழநி நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பகுதிகளில் பணிபுரியம் தொழிலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் கோவிந்தன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் பணிபுரியம் துப்புரவு பணியாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக ரூபாய் 332 நிர்ணயம் செய்துள்ளதாகவும், பிடித்தம்போக ரூபாய் 260 சம்பளமாக தரப்படுவதாக தெரிவித்தனர். இத்தொகை போதுமானதாக இல்லையென்றும், தினக்கூலியாக ரூபாய் 700 வீதம் மாதம் ரூபாய் 21 ஆயிரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். நகராட்சி பணியாளர்களுக்கு இணையாக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை, பொருளியல் மற்றும் புள்ளியியல்துறை, நகராட்சி, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் இயக்குநரக அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Wage Management Advisory Meeting ,Palani Municipality ,
× RELATED குடிநீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டும்: பழநி நகராட்சி அறிவிப்பு