×

பாப்பம்பட்டியில் நாளை மின்தடை

பழநி, பிப். 18: பழநி அருகே பாப்பம்பட்டி உப மின்நிலையத்தில் நாளை (பிப். 19, புதன்) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், தாதநாயக்கன்பட்டி, கரடிகூட்டம் மற்றும் இம்மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.



Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு