×

நத்தம் மாரியம்மன் ேகாயில் மாசி திருவிழா பிப்.24ல் கொடியேற்றத்துடன் துவக்கம் மார்ச் 10ல் பூக்குழி இறங்குதல்

நத்தம், பிப். 18: நத்தம் மாரியம்மன் ேகாயில் மாசி திருவிழா பிப்.24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வரும் பிப். 24ம் தேதி (திங்கள்) காலை 9.30 மணிக்கு மேல் 10.29க்கும் கோயில் முன்பாக கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து பிப். 25ம் தேதி உலுப்பகுடி அருகேயுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வந்து சந்தன கருப்பு சுவாமி கோயிலை வந்து சேரும் நிகழ்வு நடைபெறும். பின்னர் காலை 8.45 மணிக்கு அங்கிருந்து பக்தர்களை மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும். அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும்.

தொடர்ந்து பிப் 28ம் தேதி மயில் வாகனத்தில் எழுந்தருளல், மார்ச் 2ம் தேதி மாலையில் தேர் சட்டம் போடுதல் நடைபெறும். பின்னர் மார்ச் 3ம் தேதி சிம்ம வாகனத்திலும், மார்ச் 6ம் தேதி அன்னவாகனத்திலும் மின்விளக்கு அலங்காரத்துடன் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வந்து அங்குள்ள மண்டகப்படிகளில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 8ம் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மார்ச் 9ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை எடுத்து வருதல் நடைபெறுவதை தொடர்ந்து அன்று மாலையில் 3 மணிக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, காவடி வகையறா எடுத்தல் நடைபெறும்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 10ம் தேதி பக்தர்கள் அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை அக்னிசட்டி எடுத்தல் நடைபெறும். பின்னர் கோயில் முன்பாக கழுகுமரம் ஊன்றப்பட்டு, மாலையில் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்றிரவு கோயிலிலிருந்து கம்பம் கொண்டு போய் அம்மன் குளத்தில் சேர்க்கப்படும். மார்ச் 11ம் தேதி காலை 9 மணிக்கு மாரியம்மன் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு மாரியம்மன் பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலம் வந்து கோயிலை சென்றடையும். அத்துடன் மாசி திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோயில் பூசாரிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Nasham Mariamman Kayil Masi Festival ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்