×

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் பழநியில் இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டம் போலீசார் குவிப்பு

பழநி, பிப். 18: குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக பழநியில் இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். குடிமக்களின் தேசிய பதிவை ரத்து செய்ய வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவை ஏற்கமாட்டோமென வலியுறுத்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.இந்நிலையில் கேரளா, ராஜஸ்தான், புதுவை மாநிலங்களில் மத்திய அரசின் இச்சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோமென சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், இச்சட்டம் தொடர்பாக நடந்த சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி நேற்று முன்தினம் இரவு பழநி சின்னப்பள்ளிவாசல் எதிரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் திரண்டு

Tags : Citizenship Amendment Law ,
× RELATED குடியுரிமை திருத்த சட்ட வழக்கு: ஐநா....