கொடைக்கானல் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு

கொடைக்கானல், பிப். 18: கொடைக்கானல் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டனர். கொடைக்கானல் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தேரோட்ட விழா கடந்த பிப்.9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து பிப்.10ம் தேதி அன்ன வாகனத்திலும், பிப். 11ம் தேதி மயில் வாகனத்திலும், பிப். 12ம் தேதி காளை வாகனத்திலும், பிப். 13ம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், பிப்.14ம் தேதி பூத வாகனத்திலும், பிப். 15ம் தேதி சிங்க வாகனத்திலும், பிப்.16ம் தேதி யானை வாகனத்திலும் குழந்தை வேலப்பரான முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை அலங்கரிக்கப்பட்ட தேரின் முன்பு பூக்கள் கல்லால் ஆன பாதை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து பெரியவர்கள் தேங்காய் உடைத்த பின், பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோயிலை சுற்றி வந்த பின் தேர் நிலையை அடைந்தது.இதில் மெர்சி செந்தில், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி, துணைத்தலைவர் முத்துமாரி, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜதுரை, கருமலை பாண்டி மற்றும்கொடைக்கானல் மலைகிராமங்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி தலைமையில் விழா குழுவினர், பூம்பாறை மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: