தமிழ்மொழி விழிப்புணர்வு பேரணி

நெல்லை, பிப். 18: நெல்லையில் தமிழ் மொழி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நெல்லை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி வாரவிழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தினமும் ஆட்சிமொழி குறித்த சிறப்பு பட்டிமன்றம், விளக்க கூட்டங்கள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நேற்று தமிழ் மொழி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பாளை லூர்துநாதன் சிலை அருகே தொடங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி முன்னிலை வகித்தார். பொதிகை தமிழ்சங்க தலைவர் கவிஞர் ராஜேந்திரன், ஜான்ஸ் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ஆன்ட்ரூஸ் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஜான்ஸ்கல்லூரி வரலாற்றுத்துறையின் தமிழ்மொழி பிரிவு மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணி தெற்குபஜார் வழியாக அருங்காட்சியகத்தை அடைந்தது. தொடர்ந்து அருங்காட்சியகத்தில் ‘யாதும் தமிழே’ என்ற தலைப்பில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி  மாணவிகள் மற்றும் பொதிகை தமிழ்சங்கத்தினர் கவிதை வாசித்தனர்.

Related Stories: