பாளை தலைமை தபால் நிலையத்தில் ஒருங்கிணைந்த பார்சல் பட்டுவாடா மையம் திறப்பு

நெல்லை, பிப்.18: நெல்லை அஞ்சல் கோட்டத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பார்சல் பட்டுவாடா மையம் பாளை தலைமை தபால் நிலைய வளாகத்தில் நேற்று திறக்கப்பட்டது. தென்மண்டல அஞ்சல்துறை இயக்குனர் மோகன்தாஸ் மையத்தை நேற்று தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தென்மண்டல (தபால்) உதவி இயக்குனர் லெட்சுமணன், நெல்லை அஞ்சல் பொருள் சேமிப்பு கிடங்கு கண்காணிப்பாளர் பினு ஆகியோர் பேசினர். நெல்லை அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர்கள் வேதராஜன், மாரியப்பன், பாளை உபக்கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன், பாளை தலைமை அஞ்சலக அதிகாரி விக்டோரியா ஆகியோர் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பார்சல் பட்டுவாடா மையத்தின் மூலம் பாளை, மகராஜநகர், நெல்லை, பெருமாள்புரம், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், மேலப்பாளையம் ேபான்ற அஞ்சலகங்களுக்கு உட்பட்ட பட்டுவாடா பகுதிகளைச் சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு வரும் பார்சல்களை நேரடியாக பட்டுவாடா செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு அதிகாரி சபாபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Related Stories: