ஆற்றில் வண்டல் மண் அள்ளுவதால் நீராதாரம் பாதிப்பு மக்கள் தேசம் கட்சியினர் மனு

நெல்லை, பிப். 18: மக்கள் தேசம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சுகுமார் தலைமையில், நிர்வாகிகள் பட்டுராஜா, மதிவாணன், கந்தசாமி, குட்டியப்பன், செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் அளித்த மனு: தெற்கு கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் குவாரிக்கு அங்குள்ள வண்டல் ஓடை ஆற்றில் இருந்து மணல் அள்ளுகின்றனர். மேலும் அந்த ஆற்று தண்ணீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சுகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள வண்டல் ஓடை மண் அணைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அப்பகுதியில் மண் அள்ளுவதால் வண்டல் ஓடை ஆறு, ஓடை அணை, மொட்டையாலோடை ஆறு ஆகியவையும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஆற்றில் மண் அள்ளப்படுவதால் மலையான்குளம், மூலச்சி, அழகப்பபுரம், செங்குளம், வெள்ளங்குளி, பொட்டல், பாடகபுரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் எங்கள் கிராமங்களின் நீராதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே குவாரிக்கு மண் எடுப்பதை தடுத்து, எங்கள் விவசாயம் செழிக்க உதவுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: