×

காரிமங்கலம் அருகே திமுக கொடியேற்று விழா

காரிமங்கலம், பிப்.18: காரிமங்கலம் அருகே, பெரியாம்பட்டியில் நடந்த விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில்  கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்விடி கோபால், அவைத்தலைவர் மாதையன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், துணை அமைப்பாளர் மணி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மகேஷ்குமார் வரவேற்றார். திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றினார். அவருக்கு இளைஞர் அணி சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், இன்பசேகரன், முன்னாள் எம்பி சுகவனம், மாவட்ட கவுன்சிலர் தீபாமுருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி தீபாமுருகன்பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சங்கர், ஒன்றிய செயலாளர்கள் எச்சனஅள்ளி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,flag ceremony ,Karimangalam ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...