×

சிறுபான்மையினருக்கு ₹14.56 லட்சத்தில் நலத்திட்ட உதவி

தர்மபுரி, பிப்.18:தர்மபுரியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் இஸ்லாம், கிறிஸ்தவ மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ‘தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள, 500 பயனாளிகளுக்கு தலா ₹20ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு ₹1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மெக்கா செல்லும் பயணிகளுக்கு ₹6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது,’ என்றார். முன்னதாக, திப்பம்பட்டியில் கால்நடை கிளை நிலையம் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் பாலக்கோட்டில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் மலர்விழி, சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், தர்மபுரி எஸ்பி ராஜன், எம்எல்ஏக்கள் சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : minorities ,
× RELATED 2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும்...