×

ஓசூரில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி போலீஸ் குவிப்பால் பரபரப்பு

ஓசூர், பிப்.18: ஓசூரில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், நேற்று ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்சுகூட்டம் நடைபெற்றது. ஓசூரில் பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள மசூதி முன்பிருந்து துவங்கிய ஒற்றுமை அணிவகுப்பு எம்ஜிரோடு வழியாக ராம்நகர் அண்ணா சிலை அருகில் முடிந்தது. இப்பேரணியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் சீருடையில் கலந்து கொண்டனர். பின்னர், ராம் நகர் அண்ணா சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தமிழ் மாநில செயலாளர் முகமது பயாஸ் தலைமை வகித்து பேசினார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய இயக்கமாக அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வாருங்கள் சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் ஆவோம் என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழகத்தில் திண்டுக்கல், நாகை, ஓசூர் ஆகிய பகுதிகளில் சீருடை தொண்டர்களின் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் முகமது கலீல், மாவட்ட செயலாளர் சலாமத், எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா, தேசிய செயலாளர் அனீஸ் அகமது ஆகியோர் பேசினர். மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது. எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அப்துல் அமீது மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பையொட்டி எஸ்.பி. சிவகுமார்(கலால்), ஏடிஎஸ்பி சக்திவேல், டிஎஸ்பிக்கள் முரளி, குமார், சங்கீதா, ரவிச்சந்திரன், ராமமூர்த்தி, சுப்பிரமணி, சொக்கைய்யா, ராஜேந்திரன் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Unity ,parade rally ,Hosur ,
× RELATED திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி