×

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு விளக்க பயிற்சி

கிருஷ்ணகிரி, பிப்.18: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி வட்டார வளமையத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் 600 பேருக்கு, பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தனி கவனம் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, முதற்கட்டமாக நேற்று நடந்த பயிற்சியினை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் தொடங்கி வைத்தார். இதில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் குமரன், சீனிவாசன், மஞ்சுளாதேவி, சுந்தரலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் மரகதவேல், கோமதி ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியின் போது, உள்கட்டமைப்பு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், உளவியல் மற்றும் சமூக நோக்கங்கள், ஆசிரியர்களின் பங்கும்- கடமைகளும், கண்காணித்தல், குழந்தைகள் பாதுகாப்பு சரிபார்ப்பு பட்டியல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிகடகப்பட்டது. முதல் நாள் பயிற்சியில் 163 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 2ம் நாள் பயிற்சி வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, ஆசிரியர் பயிற்றுநர்கள் தாமோதிரன், பார்த்தீபன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்