×

எண்ணேகொல்புதூர் திட்டத்திற்காக விவசாயிகள் நடைபயணம்

காவேரிப்பட்டணம், பிப்.18: எண்ணேகொல்புதூர் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி நடைபயணம் மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு காவேரிப்பட்டணத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணையில் இருந்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று கோரிக்கை நடைபயணம் தொடங்கியது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொல்புதூரில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து ₹276 கோடி மதிப்பிலான வலது-இடதுபுற கால்வாய்  திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த நடைபயணம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் அய்யாக்கண்ணு துவக்கி வைத்தார். காவேரிப்பட்டணம் வந்த நடைபயண குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன், சதாசிவம், மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜவேல், முன்னாள் மாவட்டத் தலைவர் சின்னராஜ் ,மாவட்ட செயலாளர் ஜெயவேலன், ஒன்றிய தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநில பிரசார குழு தலைவர் விஜய்காந்த் நன்றி கூறினார்.

Tags : Farmers Walking ,
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்