×

கெம்பிளாஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாம்

மேட்டூர், பிப்.18: மேட்டூர்  ஆர்.எஸ்.பகுதியில் உள்ள வைத்தீஸ்வரா மேல்நிலைப்பள்ளியில், கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம் மற்றும் சேலம்  ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவன துணைத்  தலைவர் ஸ்ரீதர் வாசுதேவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சக்கரவர்த்தி  முன்னிலை வகித்தார். ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்  அர்த்தனாரி, குத்துவிளக்கேற்றி வைத்தார். இதில்  60 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர், முகாமில்  கலந்து கொண்ட பொதுமக்களுக்கு ஈசிஜி, எக்கோ, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட  பரிசோதனை செய்தனர். கோனூர், திப்பம்பட்டி, சேலம் கேம்ப்,  தங்கமாபுரிபட்டணம், புதுச்சாம்பள்ளி, குஞ்சாண்டியூர், ராமன்நகர் உள்ளிட்ட  பகுதிகளை  சேர்ந்த 581 பேர் முகாமில் கலந்து கொண்டனர். முகாமை கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவன மருத்துவ அலுவலர்கள் தாமரைக்கண்ணன், ரகுநந்தா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags : Free Medical Camp ,
× RELATED மீஞ்சூர் காவல் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்