பாபநாசம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தர்பூசணி விற்பனை சூடுபிடிப்பு

பாபநாசம், பிப். 18: கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்னரே பாபநாசம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் குளிர்பானங்களை நாட துவங்கி விட்டனர். அதன்படி தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சு, நுங்கு உள்ளிட்டவற்றை மக்கள் துவங்கியுள்ளனர்.பாபநாசம் பகுதியில் கடந்த ஆண்டை காட்டிலும் தர்ப்பூசணியின் வரத்து குறைவாகவே உள்ளது. தற்போது தர்ப்பூசணி ஒரு பீஸ் ரூ.10க்கும், ஒரு கிலோ ரூ.30க்கும் விற்கப்படுகிறது. இதுகுறித்து கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் பண்டாரவாடை அருகே தர்ப்பூசணி விற்பனை செய்து வரும் வியாபாரியிடம் கேட்டபோது, கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு தர்ப்பூசணியின் வரத்து குறைவு தான். இதற்கு தை மாத்தில் பெய்த மழையால் அழுகி விட்டது தான் காரணம். பண்ருட்டியில் இருந்து வந்த பழங்களை தான் நாங்கள் விற்கிறோம். சித்திரை, வைகாசியில் தான் தர்ப்பூசணியின் வரத்து அதிகமாகும் என்றார்.

Related Stories: