×

கலெக்டர் தொடங்கி வைத்தார் அனைத்து கிராம ஊராட்சி பகுதியிலும் பார்த்தீனியம் செடிகளை அகற்றும் பணி துவக்கம்

அரியலூர், பிப். 18: அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி கிராமத்தில் பார்த்தீனியம் செடிகள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை துவக்கி வைதது கலெக்டர் ரத்னா பேசியதாவது: பார்த்தீனியம் செடிகள் 3 முதல் 4 அடி வரை வளரf;கூடியது/ ஆழ்வேர்களை கொண்ட பூக்கள் தாவரமாகும். இவை நன்கு அறியப்பட்ட நட்சத்திரம் போன்ற வெண்பூக்களால் படரப்பட்ட தாவரமாகும். நம் நாட்டில் இவையாக வளருகிறது. இவை ஐப்பசி - கார்த்திகை மாதங்களில் அடர்ந்து வளர்கின்றன. இவ்வாறு வளரும்போது இவை பூக்களை அதிகமாய் உற்பத்தி செய்து காற்றில் பரவுகின்றன.
ஆதலால் இவை பேருயிர்களின் சுவாச குழலுக்குள் சென்று ஒவ்வாமையை ஊக்குவிக்கின்றன. விலங்குகளின் உடலில் படும்போது அரிப்பு போன்ற உணர்வு ஏற்படும். இவற்றால் நன்மைகளை விட தீமையே அதிகம். இவை வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துகள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாச கோளாறு, ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன.

இவற்றை உண்ணும் பசுக்களின் பால் ஒருவித கசப்பு தன்மை, சிறிதளவான அதாவது மறைமுகமான நச்சுத்தன்மை கொண்டிருக்கும். இவை சரும நோய்கள், சொரி மற்றும் கரப்பான்நோயை உண்டாக்குகின்றன. இச்செடிகளை அழிப்பது கட்டாயமாகும். ஏனெனில் விளை நிலங்களையும், வளிமண்டலத்தையும் பெரிதும் மாசுப்படுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வினமே அழிப்பதற்கு காரணமாக திகழ்கின்றன. இவைகளை அழிக்க செடிகளை பிடுங்கி பள்ளத்தில் இட்டு உப்பு கரைசல் இட்டு குழிகளை மூட வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் 23ம் தேதி வரை பார்த்தீனியம் செடிகள் ஒழிப்பு வாரம் கடைபிடிக்க ஊராட்சி செயலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தன்னார்வ பொதுமக்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் ஆகியோரை ஈடுபடுத்தி அரியலூர் மாவட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்றி மக்கள் வசிப்பிடத்துக்கு அப்பாற்பட்டுள்ள பயன்பாடற்ற நிலத்தில் குழித்தோண்டி புதைக்கும் பணிகள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் இதே வாரத்தில் தனியார் நிலங்கள், விவசாய நிலங்களில் உள்ள பார்த்தீனியம் செடிகளை முற்றிலும் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பார்த்தீனியம் செடி ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், ராஜா, ஊராட்சி தலைவர் பரமசிவம், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி மாணவர்கள், அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Collector ,plants ,Panchayats ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...