×

சமூக வலைதளங்களில் பரபரப்பு பாகுபலி ஆகிய நான், ஹெல்மெட் போடாமல் டூவீலர் ஓட்ட மாட்டேன்

பெரம்பலூர்,பிப்.18: பாகுபலி ஆகிய நான், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்க மாட்டேன் என சினிமாப் பட பாணியில் மீம்ஸ்களை தெ றிக்கவிடும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். தினம்தினம் சுடச்சுடச் செய்திகளைத் தர நாளிதழ்களும், உடனுக்குடன் செய்திக ளை தர தொலைக்காட்சிகளும் உள்ளநிலையில், சமீப காலமாக சமூக வலைத ளங்கள், மக்கள் மனங்களைப் பெரிதும் ஆக்கிரமித்து புதுப்புதுத் தகவல்களை காற்றின் வேகத்தில் கடத்தும் ஊடகங்களாக பரிணாமித்து வருகின்றன. இதில் வாட்ஸ் அப், பேஸ்புக், டு விட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் என பல்வேறு விதங்களில் சமூக வலைதளங்கள் உலக அளவில் ஊடுருவியுள்ளன. இந்த சமூக வளைதளங்களை பயன்படுத்தி, அன்றாடம் வெளியாகும் செய்திகள், சம்பவங்கள், அரசியல் வாதிகள், அமைச்சர்கள், அரசுஅதிகாரிகள், சினிமாக் காரர்கள் ஆகியோரது நட வடிக்கைகள் குறித்த மக்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் மீம் ஸ்கள் வெளிவந்து லட்சோ பலட்சம் ரசிகர்களையும், லைக்குகளையும் வாரிக் குவித்து வருகின்றன. இதற்குக் காரணம் வெளிப்ப டையாக சொல்ல முடியாத விமர்சனங்களை, கேலிக் கிண்டல்களை, அறிவுரை களை, விழிப்புணர்வுகளை ஒரேயொரு மீம்ஸ் மூலம் எளிதில் கொண்டு சேர்க்க முடிகிறது. இதனால் தற்போது அரசியல் வாதிகள், சினிமாக்காரர்கள் போன்றோர் தங்கள் கருத்துக்களை, பதில்களை, வேண்டுகோளை வெளிப்படுத்த கணினியில் மீம்ஸ் கிரியேட்டர்களை பணிக்கு அமர்த்துவதே வழக்கமாகியுள்ளது.

இதேபாணியை காவல்துறையும் தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாடு காவல்துறையால் பெண்கள் பாதுகாப்புக்காக தோற்று விக்கப்பட்டுள்ள காவலன் ஆப் குறித்தும், சாலை விப த்துகளைத் தடுக்க, உயிர்ச் சேதத்தைத் தவிர்க்க இருச க்கர வாகனங்களில் செல் லும்போது, கட்டாயம் ஹெல்மெட் அணிவது அவசியம், கார்களில் சீட்பெல்ட் அணிவது அவசியம் போன்றக் கருத்துக்களை நூதனமாக சமீபத்திய டிரெண்டைப் பயன்படுத்தி மீம்ஸ்களின் மூலம் தெரி வித்து வருகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டக் காவல் துறை தனது பேஸ் புக், வாட்ஸ்அப், டெலிகி ராம் ஆகியவற்றில் சினி மாப்பட பாணியில் புதுபுது மீம்ஸ்களை கிரியேட் செய் து காவலன் ஆப்குறித்தும், ஹெல்மெட் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதில் உலக அளவில் வச லில் வாரிக்குவித்த பாகுபலி திரைப்படத்தின் பரபர ப்பான கட்சியான, பாகுபலி தனது மனைவி தேவசேனாவின் முதுகில் கை வை த்த படைத்தளபதியை, ராஜ மாதா சிவகாமி முன்னிலையில் தலையை சீவுவது போன்ற காட்சிக்கு இணையாக, சிவகாமி என்ன நடந்தது தேவசேனா என கேட்ப தாகவும், அதற்கு பதிலளிக்கும் தேவசேனா, படைத்தளபதி பெண்களின் மேல் கை வைத்து முதுகில் தொடவந்தான். காவலன் ஆப் பை அழுத்திவிட்டேன் அதனால் பாகுபலி ரூபத்தில் காவலன் ஆப் தன்னை வந்து காத்ததுபோல் பதில் கூறுவதாக அந்த மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு மீம் சில் மன்னர் பதவி கிடைக்காத மகேந்திர பாகுபலி படைத் தளபதியாக பொறுப்பேற்கும் போது கூறுவதாக, பாகுபலி ஆகிய நான் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்க மாட்டேன் என உறுதி அளிக்கிறேன் எனக் கூறுவதாகவும் அப்போது பதவி ஏற்கும் நிகழ்வைப் பார்க்கும் பொதுமக்கள் தரப்பில், தனிமனித மாற்றம், தமிழ்நாட்டின் மாற்றம் என்றக் கருத்தை தெரிவிப்பதாக அந்த மீம்ஸ் உள்ளது. மேலும் நடிகர் வடிவே லு நடித்த சில்லுனு ஒரு கா தல்என்ற சினிமாபடத்தில் கணவன் மனைவி காமெடி காட்சியை போல், குருவம் மா என்ன விட்டுட்டு ஊரு க்கு போறியாமே என வடி வேலு கேட்பதாகவும், ஆமா ம் போறேன் என தெரிவிக் கும் மனைவியிடம் நான் இல்லாம தனியா எப்படி போவீங்க என வடிவேலு கேட்கும் கேள்விக்கு அவ ரது மனைவி துணிச்சலாக அது தான் பெண்களை பாதுகாக்க காவலன் ஆப் உள்ளதே அப்புறம் என்ன. இனி பிறந்த வீட்டுக்கு ம னைவி தனியாகச் செல்ல (கணவரின்) உங்கள் தயவு உள்ளம் தேவையில்லை என்பது போல் அந்த மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் உள்ள ஊடகப் பிரிவினர் இதுபோன்ற விழிப்புணர்வு மீம்ஸ்களை பொதுமக்கள், இளைஞர்கள், வாகன ஓட்டிகள் ரச னைக்கேற்ப சினிமா பட பாணியில் கிரியேட்செய்து சமூக வலைதளங்களில் பர ப்பி தெறிக்க விடுவது பெரம்பலூர் மாவட்ட அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா