×

காசநோய் தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், பிப். 18: பெரம்பலூரில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. உலக காசநோய் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. காசநோயை உண்டாக்கக்கூடிய மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் கிருமியை கண்டுபிடித்த தினமே உலக காசநோய் தினமாகும். காசநோய் காற்றின் மூலம் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். பெரம்பலூரில் உலக காச நோய் தின வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதல் சங்குப்பேட்டை வரை நடந்தது. பேரணியை இணை இயக்குனர் டாக்டர் திருமால் கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் நெடுஞ்செழியன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜா, டாக்டர்கள் சீமா, அசோக்ராஜ் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் நல கல்வியாளர் மனோகரன், மாவட்ட காசநோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் புரட்சிதாசன், மாவட்ட வீரிய காசநோய் ஒருங்கிணைப் பாளர் அழகேசன், மாவட்ட டிபிபிஎம் ஒருங்கிணைப்பாளர் பபியோலா இமாகுலேட் மற்றும் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு பணியாளர்கள், நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இதில் காசநோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை கைகளில் ஏந்தி சென்றனர்.

Tags : TB Day ,
× RELATED உலக காசநோய் தின விழா