வீராம்பட்டினத்தில் பாய்மர படகு கட்டுமான பணி தீவிரம்

புதுச்சேரி, பிப். 18:  புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசின் சுற்றுலாத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீராம்பட்டினத்தில் அரிக்கன்மேடு காட்சியகம் மற்றும் ரோமன் நாட்டு கப்பல் போக்குவரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஷிப் (பாய்மர படகு) அமைக்கும் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.இப்பணி ஒருசில மாதங்கள் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் இப்பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட ஒருசில இறுதிகட்ட பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.வீராம்பட்டினம் கடற்கரை மணலில் புதைத்திருக்கும் வடிவிலான அமைப்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்த பாய்மர படகினை தயாரிக்கும் பணியில் பாரதியார் பல்கலைக்கூட உதவி பேராசிரியர் ராஜராஜன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: