விஏஓக்களுக்கு செலவின தொகை வழங்க வேண்டும்

விழுப்புரம், பிப். 18: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணியாற்றிய விஏஓக்களுக்கு செலவினத்தொகை வழங்கிட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் வெற்றிகொண்டான், லட்சுமணன், சஷ்டிகுமரன், உமாசங்கர், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் வரவேற்றார். மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சுப்பிரமணின், மாநில செயலாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் கருணாநிதி, வரதராஜன், ரஞ்சித்குமார், சத்தியமூர்த்தி, திருவெங்கடேஷ், உமாபதி, அன்பு, ரூபலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

கூட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்ட நிலையில் மாவட்ட இடமாறுதல் நடத்திட வேண்டும். நகர நிலஅளவை ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு செலவினத் தொகையை வழங்க வேண்டும். 17 கிராம நிர்வாக அலுவலர்கள் மீது இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள குற்றச்சாட்டு குறிப்பாணையை நீக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: