சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

விழுப்புரம், பிப். 18: விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை எஸ்பி பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில், காரை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த எஸ்ஐ இளங்கோவன் தலைமையிலான போலீசாருக்கும், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபாட்டில், காரை பறிமுதல் செய்த எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசாரின் பணியை பாராட்டி எஸ்பி ஜெயக்குமார் சான்றிதழ், ஊக்கப்பரிசுகளை வழங்கினார். அதேபோல், விழுப்புரம் நகரகாவல்நிலையத்திற்கு உட்பட்ட ரயில்வே குடியிருப்பில் பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சிறுவனை கைது செய்த சிறப்பு எஸ்ஐ பாண்டியன், ஏட்டுகள் மணிமாறன், பாலமுருகன், சிவஜோதி, குமரகுரு மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, சாராயத்தை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்ட எஸ்ஐ அன்பழகன், தனிப்பிரிவு போலீசார் அண்ணாமலை ஆகியோரையும், திருவாரூர் மாவட்ட பிரபல ரவுடியை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மடக்கி பிடித்த எஸ்ஐ மருதப்பன் தலைமையிலான போலீசார் பணியை பாராட்டி எஸ்பி ஜெயக்குமார் சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கினார். அப்போது கூடுதல் எஸ்பி சரவணக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

அரசு தொட்டில் திட்டத்தில் பச்சிளம் குழந்தை ஒப்படைப்புதிண்டிவனம், பிப். 18: வானூர் அருகே ஒழிந்தியாம்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 ஆண், 1 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கடந்த ஜனவரி 21ஆம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தையை அவர் உறவினரிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த குழு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தது.

அதன்பேரில் கிளியனூர் போலீசார் ஒழிந்தியாம்பட்டுக்கு சென்று குழந்தையை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி தாயிடம் விசாரித்தனர். அப்போது குழந்தையை வளர்க்க முடியாது என்று தாய் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அந்த குழந்தை நேற்று விழுப்புரம் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க திண்டிவனம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதியிடம் ஒப்படைத்தார். அவர் குழந்தை மற்றும் தாயை விழுப்புரம் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தை பின்னர் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: