கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி, பிப். 18: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி தோற்றுவிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த குமரன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டு ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக பகுதியில் உள்ள ஒரு அறையில் தற்காலிக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகமானது தேர்வு செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் முதன்மை கல்வி அலுவலராக குமரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர்கள் கள்ளக்குறிச்சி கார்த்திகா, உளுந்தூர்பேட்டை மணிமொழி, திருக்கோவிலூர் சுப்ரமணி, மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் சுப்ரமணியன், இளங்கோவன், ஜெயராமன், குமார் மற்றும் 3 மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட 16 வட்டார கல்வி அலுவலர்கள், 3 பள்ளி துணை ஆய்வாளர்கள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் முதன்மை கல்வி அலுவலருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  

 

Related Stories: