×

சேதமான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை


விருத்தாசலம், பிப். 18:  விருத்தாசலம் சன்னதி தெரு, வடக்கு கோட்டை வீதியை இணைக்கும் பகுதியில் வானொலி திடல் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தில் அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளுக்கான கலையரங்க மேடை உள்ளது. இந்த மேடையின் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பத்தின் மூலம் வடக்குக் கோட்டை வீதி, தீர்த்த மண்டபத் தெரு, சன்னதி தெரு மற்றும் வானொலி திடல் கலையரங்கம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல வருடங்களாக சேதமடைந்துள்ள இந்த மின்கம்பம் திடீரென உடைந்து விழுந்தால், மிகப்பெரிய மின் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதோடு அப்பகுதியில் மின் விநியோகம் தடைபடும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்