×

கேங்மேன் வழக்கு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்

திருப்பூர்,பிப்.18:மின் வாரிய கேங்மேன் பதவி தொடர்பாக புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடக்கூடாது என தொ.மு.ச. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின் வாரியத்தில் கேங்மேன் பதவியை தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேங்மேன் பணிநியமனம் தொடர்பாக புதிய அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே தொ.மு.ச.  தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டது. தற்போதைய நிலையே தொடரும்  என்றும் இவ்வழக்கை வரும்  மார்ச் 5ம் தேதிக்கு  ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர்சரவணன் கூறுகையில்;
மின்வாரியத்தில் கேங்மேன் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த பதவிக்கு நேர்முக தேர்வுகள் நடத்த மின்வாரியம் முடிவு செய்து  தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் பல இடங்களில் பயிற்சி வகுப்புகள், நேர்முக தேர்வுகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேங்மேன் பதவியை நேரடி நியமனம் செய்ய எடுத்து வரும் மின்வாரிய நடவடிக்கைக்கு தடை கோரியும்,  ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும் தொ.மு.ச.  சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை பெறப்பட்டுள்ளது. மீண்டும் ஐகோர்ட்டில் மின்வாரியத்தின் தொடரப்பட்ட வழக்கு விசாரணை 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் நீதிமன்றம் மூலம் கேங்மேன் பதவியை ரத்து செய்து தமிழகம் முழுவதும்  உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவு படி பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். அதற்கான முழுவீச்சில் தொ.மு.ச. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Tags : Gangman ,
× RELATED நங்கநல்லூர், கொரட்டூரில் மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன், வக்கீல் பலி