×

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர்,பிப்.18: திருப்பூரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பின்னாலடை தொழில்கள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், பின்னாலடை துறையை சேர்ந்த சார்பு தொழில்களான நிட்டிங், ஸ்பின்னிங், டையிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளது. இதில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில் தினசரி திருப்பூருக்கு ரயில்கள் மூலம் வடமாநில தொழிலாளார்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். வடமாநில தொழிலாளர்களின் வருகைகேற்ப குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாநகரப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காலை மாலை நேரங்களில் போக்குவரத்து கடும் நெருக்கடியாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை கல்லூரி ரோட்டின் வழியாக கணியாம்பூண்டி செல்லக்கூடிய மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சிக்கண்ணா கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் மினி பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியவாறு பயணம் செய்தனர். இவர்களது ஆபத்தான பயணம் மினி பஸ்சின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகளை பெரிதும் அச்சப்படுத்தியது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இது போன்ற குற்றச்செயல்களின் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் தண்டிக்க வேண்டும். இதனை கண்டும் காணாமல் இருந்தால் சாலை விபத்துகள் அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.

Tags : traffic violators ,
× RELATED சென்னையில் போக்குவரத்து விதிமீறிய 12,300...