×

ஆனிக்கல் மாரியம்மன் கோயில் பூ குண்டம்

ஊட்டி,பிப்.18: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஆனிக்கல் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆண்டுேதாறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் பூ குண்டம் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆனிக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் மார்ச் 1ம் தேதியன்று மாலை 6 மணிக்கு கோயில் நடை திறப்புடன் துவங்குகிறது. 2ம் தேதியன்று காலை 10 மணிக்கு பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வருதல், மாலை 3 மணிக்கு பூஜை ஆராதனை, முடி காணிக்கை செலுத்துதல், அம்மன் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இரவு 12 மணிக்கு அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 3ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பூ குண்டம் திறக்க சிறப்பு பூஜை நடக்கிறது.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி தொகுதி எம்.பி. ராசா, எம்.எல்.ஏ.க்கள் கணேசன், சாந்திராமு, திராவிடமணி, மாவட்ட எஸ்பி. சசிமோகன் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். பிற்பகல் 11 மணியளவில் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை எப்பநாடு ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். ஆனிக்கல் மாரியம்மன் கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ள நிலையில் காட்டு தீ ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விழா நாட்களில் மது அருந்துவது, விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...