×

ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

மஞ்சூர்,பிப்.18: ஊராட்சி பம்ப் ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட ஊராட்சி குடிநீர் குழாய் பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) கூட்டம் மஞ்சூர் அருகே உள்ள ஆருகுச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் குமார், மோகன், வைதேகி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக சங்க மாவட்ட பொது செயலாளர் ரகுநாதன், மாவட்ட செயலாளர் போஜராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள். அரசாணைபடி ஊராட்சிகளில் பணியாற்றி வரும் குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.14 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் அதன் நிலுவை தொகை ரூ.78 ஆயிரத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 1992 முதல் 2005 வரை வழங்க வேண்டிய சிறப்பூதிய நிலுவை தொகை மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.500 வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஓய்வு வயதை அடைந்த பணியாளர்களுக்கு ஓய்வு பெறுவதற்கான ஆணை மற்றும் ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசாணை எண் 14ன்படி ஜனவரி 2020ல் இருந்து ஊராட்சி துப்பரவு பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் சேர்த்து அதற்குண்டான ஊதியத்தை வழங்க வேண்டும். பணி மூப்பு மற்றும் கல்வி தகுதி அடிப்படையில் ஊராட்சி பணியாளர்களை செயலர் மற்றும் பிட்டர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலூர் ஊராட்சியில் 2017 முதல் இதுவரை வழங்கப்படாமல் உள்ள 7வது ஊதியகுழு நிலுவை தொகையை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் பால்ராஜ், தாமஸ், ஜோகராஜ், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags : Panchayat cleaning workers ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...