×

ஊட்டி - சோலூர் சாலையில் முறிந்து தொங்கும் மரக்கிளைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

ஊட்டி,பிப்.18: ஊட்டியில் இருந்து சோலூர் செல்லும் சாலையில் 7வது மைல் மற்றும் ேசாமர்டேல் பகுதிகளில் சாலையோரங்களில் முறிந்து தொங்கிக் கொண்டிருக்கும் பைன் மரங்களால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து தலைகுந்தா, 7வது மைல் வழியாக சோலூர், கோக்கால் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், தலைகுந்தா முதல் சோலூர் வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் கற்பூர மரங்கள், சீகை மரங்கள் மற்றும் பைன் மரங்கள் அதிகளவு உள்ளன.குறிப்பாக, ஊட்டி - கூடலூர் சாலை சந்திப்பில் இருந்து (7வது மைல்) சோமர்டேல் பகுதி வரையில் சாலையோரங்களில் பைன் மரங்கள் அதிகளவு உள்ளன. சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு மேல் இந்த மரங்கள் சாலையோரங்களில் காணப்படுகிறது. நெடு நெடுவென வளர்ந்துள்ள இந்த மரங்கள் தற்போது சாலையை மறைத்து விட்டன. சாலைக்கு வெயில்படுவதே இல்லை. இச்சாலையில் எந்நேரமும் நிழல் விழுவதாலும், மழைக்காலங்களில் தண்ணீர் சொட்டிக் கொண்டே இருப்பதால், சாலை பழுதடைந்துள்ளது.

மேலும், பல மரங்கள் இச்சாலையின் குறுக்கே தொங்கிக் கொண்டிருக்கிறது.சில மரங்கள் எந்நேரம் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் மரங்களால் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும்போது இடையூறாக உள்ளது. எனவே, இச்சாலையில், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொங்கிக் கொண்டிருக்கும் மரங்கள் மற்றும் சாலை பழுதடைய காரணமாக நிழல் தரும் தரும் மரக்கிளைகளை வனத்துறையின் அப்புறப்படுத்தினால் பொதுமக்களையும் பாதுகாக்கலாம். சாலையும் பழுதடையாமல் பாதுகாக்க வாய்ப்புள்ளது.

Tags : Ooty - Cyclists ,Solur Road ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்