×

பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில் வரி செலுத்தாமல் கொண்டுவந்த வாசனை திரவியம் பறிமுதல்

பாலக்காடு,பிப்.18: பாலக்காடு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணித்த நான்கு பயணிகளின் உடமைகளை திறந்து பரிசோதனை நடத்தியதில் 40 கிலோ வாசனை திரவியங்கள் இருப்பதை  பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும். உரிய ஆவணங்கள் இல்லாமல் வடமாநிலத்திலிருந்து கேரளாவிற்கு இவற்றை கடத்தி வந்த அசாமைச் சேர்ந்த ராகுல் இஸ்லாம் (27), அஷல் அகமது (28), முகமது அமீர் (31), முகமது சைபூர் இஸ்லாம் (32) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இவர்கள் அசாமிலிருந்து ரயில் மூலம் கேரளமாநிலம் மலப்புரத்திற்கு வாசனை திரவியங்களை கடத்தி செல்வதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதையடுத்து கைது செய்த 4 பேரையும் போலீசார் ஜி.எஸ்.டி., துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 18 சதவீதம் ஜி.எஸ்.டி, வரி கட்டி உரிய ஆவணங்களுடன் வாசனை திரவியங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விற்பனைக்கு எடுத்து செல்ல் வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். மேற்கண்ட நபர்கள் ஜி.எஸ்.டி., கட்டாமல் கடத்தலில் ஈடுப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : railway station ,Palakkad ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...