×

மார்க்கெட்டுகளை பராமரிக்க ரூ.2 கோடி

கோவை, பிப்.18:  கோவை மாநகராட்சியில் எம்.ஜி.ஆர். காய்கனி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், ராமர் கோயில் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், காந்திபுரம் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் மற்றும் மாநகராட்சி வணிக வளாகங்களை பராமரிக்க நடப்பாண்டிற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை, குறிப்பாக காய், பழம், இலை கழிவுகளை உரமாக்கும் பணிக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் சில இடங்களில் காய்கனி, குப்பைகள் குவிக்கப்படுகிறது. குறிப்பாக அழுகிய பழம், காய்கனிகளை தூக்கி வீசுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

இவற்றை முறையாக சேகரிக்க தேவையான இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்கவேண்டும். மார்க்கெட் வளாகத்திற்குள் கால்நடைகள் நடமாட்டம் அதிகமாகி விட்டது. மாடுகள் மார்க்கெட்டில் மேய விடாமல் தடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்னர். மார்க்கெட்டில் கூரை சீரமைப்பு, கட்டடம், சுற்றுச்சுவர், குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்தவும், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர பாதை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிகளில் திடக்கழிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனை நடக்கிறது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு