×

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மா. கம்யூ. ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 18: ஈரோடு மூலப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, தாலுகா செயலாளர் நாச்சிமுத்து, மூலப்பாளையம் கிளை செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில், வங்கிகள், எல்.ஐ.சி., ஏர் இந்தியா, எண்ணெய் நிறுவனங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களையும் தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

இந்திய பொருளாதாரம் மந்தமான நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் மேலும் வீழ்ச்சியடைய செய்யும் வகையில் உள்ளது. இந்த பட்ஜெட் வேலை இன்மையை அதிகரிக்கும். விவசாயத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும். 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்காமை, பிற ஊழியர்களின் குறைந்த பட்ச கூலியை நிர்ணயம் செய்யும் வகையில் அறிவிப்பு இல்லை. வசதி உள்ளவர்களுக்கு வரிச்சலுகையும், சாதாரண மக்களிடம் வரி என்ற பெயரில் பணத்தை பறிக்கும் வகையில் அமைந்த மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Mao ,Communist ,Demonstration ,
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...