×

ஆனந்தம்பாளையம் ஊராட்சி கணக்கு கேட்டு அதிகாரியை முற்றுகையிட்டு ஊராட்சி தலைவர் மனு

மொடக்குறிச்சி, பிப்.18: ஆனந்தம்பாளையம் ஊராட்சி செயலர் முறையான கணக்கு மற்றும் சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் தணிக்கை அலுவலரை முற்றுகையிட்டு மனு அளித்தனர். மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக கீதாரஞ்சனி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள காயத்ரி, பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை ஊராட்சி செயலர் கீதாரஞ்சனியிடம் ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கேட்டு வருகிறார். ஆனால் இதுவரை ஒப்படைக்காமல் இருந்து வருகிறார். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் கணக்கு கேட்டும் ஒப்படைக்காததால் ஊராட்சி தலைவர் காயத்ரி மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார் அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தணிக்கை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று தணிக்கை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆனந்தம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் ஆனந்தம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி புகார் மனு அளித்தார். அம்மனுவில், ஆனந்தம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை முழுமையாக இதுவரை ஒப்படைக்கவில்லை. அனைத்து ஆவணங்கள், ஊராட்சி சொத்துக்கள், போர்வெல், மோட்டார் பம்பு போன்ற ஆவணங்கள் மற்றும் விவரங்கள் கடந்த 2006 முதல் 2019 வரை ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் தகாத வார்த்தைகளாலும் கீழ்த்தரமாகவும் பேசுகிறார். மேலும் கடந்த மாதம் 24ம் தேதி ஊராட்சி கூட்டத்தில் கணக்குகளை ஒப்படைப்பதாக கூறி புதிய நோட்டுகளில் ஒரு சில ஆவணங்களை வைத்து கொடுத்துவிட்டு அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டதாக கூறுகிறார். இதுகுறித்து ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுத்து அனைத்து ஆவணங்களையும் முறையாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : officer ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...