×

குற்றவழக்குகளில் ஜாமீனில் வந்த வாலிபர் ஊர் பொதுமக்களை மிரட்டுவதாக கலெக்டர், எஸ்.பி.அலுவலகத்தில் புகார்

ஈரோடு, பிப். 18: ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் கெஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் கலெக்டர் மற்றும்
எஸ்.பி.அலுவலகத்தில் நேற்று புகார் மனு  அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த  பழனிச்சாமி என்பவரின் மகன் அப்புசாமி (33) என்பவர் பல குற்ற வழக்குகளில்  தொடர்புடையவர். பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீனில் வெளியே வந்த அப்புசாமி கடந்த  14ம் தேதி இரவு 7 மணியளவில் வடவள்ளி மாதாகோவில் மேடு பகுதியைச் சேர்ந்த  லோகநாதன் என்பவர் கெஞ்சனூரில் உள்ள தனது சித்தியை பார்ப்பதற்காக மினி  ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது அப்புசாமி வழிமறித்து ஆட்டோ கண்ணாடியை  உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அப்புசாமியை தட்டிக்  கேட்டபோது ஊர் பொதுமக்களையும் தரக்குறைவாக பேசியதோடு கத்தி  மற்றும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு மிரட்டி வருகிறார். பல வீடுகளையும்  கல்லால் தாக்கி உடைத்துள்ளார். இதனால் ஊருக்குள் பொதுமக்கள் நிம்மதி  இல்லாமல் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : Collector ,plaintiffs ,SP ,public ,
× RELATED கலெக்டர், எஸ்பி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்