குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வேலூரில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்

வேலூர், பிப்.18: அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று 2வது நாளாக வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.மேலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் காத்திருப்பு போராட்டம் நடத்தின.வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் 3வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

நேற்று காலை 5.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சாலையில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் இன்று வரை நடைபெறும் என்று தெரிகிறது.இப்போராட்டத்தை முன்னிட்டு அண்ணா கலையரங்கம் அருகில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், நந்தகுமார், அழகுராணி உட்பட போலீசார் பாதுகாப்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: