×

வேலூர் அருகே திருமணமான 7 மாதத்தில் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கர்ப்பிணி பெண் மனு மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

வேலூர், பிப்.18:வேலூர் அருகே திருமணமான 7 மாதத்தில் கணவர் இறந்துவிட்டதால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி 5 மாத கர்ப்பிணி மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.அப்போது தொழிலாளி ஒருவர் பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார், அவரை போலீசார் பிடித்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, ‘காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்த தொழிலாளி மூர்த்தி என்பது தெரியவந்தது.தொடர்ந்து அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், நெடுஞ்சாலை அமைப்பதற்காக எனது நிலத்தை அரசு எடுத்துக்கொண்டது. அதற்கான இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து 8 முறை மனு அளித்தும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு வாரத்திற்குள் இழப்பீடு வழங்காவிட்டால் குடும்பத்துடன் தீக்குளிப்பேன்’ என்றார்.ஆற்காடு பகுதியை சேர்ந்த அஸ்வினி அளித்த மனுவில் கூறியதாவது: எனது கணவர் சிவா. கடந்த ஆண்டு ஜூலை மாதம் எங்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளேன். மாமியாருடன் கருத்து வேறுபாடு காரணமாக அதே வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தோம்.

கடந்த 13ம் தேதி பரிசோதனைக்காக எனது கணவருடன் செம்பேடு சுகாதார நிலையம் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பினோம். பின்னர் ஆற்காட்டிற்கு வந்துவிட்ேடாம். இதையடுத்து எனது கணவர் சிவா மட்டும், வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள தனது பெற்ேறார் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.னது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளது. இதற்கு காரணமான எனது மாமனார் மற்றும் கணவரின் சகோதரியுடைய கணவர் ஆகியோரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ேக.வி.குப்பம் பகுதியை சேர்ந்த முதியவர்கள் அளித்த மனுவில், ‘15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிதொகை பெற்று வந்தோம். ஆனால் கடந்த 4 மாதங்களாக உதவித்தொகை வரவில்ைல என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட உதவித்தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.அதேபோல், தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘காட்பாடி அடுத்த விழுந்தாங்கல்- ஒதியத்தூர் இடையே செக்டேம் உள்ளது. இந்த செக்டேமில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு தூர்வாரி ஆழப்படுத்தினால், விவசாயித்திற்கும், அப்பகுதி மக்களுக்கும் உதவியாக இருக்கும்’ என்றனர். சிவசக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் அளித்த மனுவில், ‘பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 5 பேருக்கு சலவை இயந்திரம், 5 பேருக்கு தையல் இயந்திரம் என்று மொத்தம் ₹48 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.அதேபோல் கொல்கத்தாவில் கடந்த வாரம் நடந்த, மூத்தோருக்கான தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில், சத்துவாச்சாரியில் சிறப்பு பளு தூக்கும் பயிற்சி மைய மாணவர் அஜீத், 73 கிலோ பிரிவில் பங்கேற்று 140, 170 உட்பட 3 பிரிவில் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் கலெக்டரை சந்தித்து சான்றுகளை காட்டி வாழ்த்து பெற்றார். முன்னதாக மாவட்ட அளவில் நடந்த திறன் வளர்ப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

Tags : collector ,death ,hearing ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...