×

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி, பிப்.18: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை சார்பாக பல்வேறு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு பயிற்சி மற்றும் தேர்வு கையேடு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி  சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பொது தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு பயிற்சி மற்றும் தேர்வு கையேடு வழங்கும் விழா கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பாடவாரியாக தேர்வுக்கு தயாராவது, அதிக மதிப்பெண் பெறுவது குறித்து விளக்கினர்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மிர் அலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வள்ளிமுத்து, புகழேந்தி முன்னிலை வகித்தனர்.விழாவில், சிறப்பு அழைப்பாளராக பிர்லா கார்பன் தொழிற்சாலை மேலாளர் மோகனசுந்தர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பேசி அனைவருக்கும்  கற்றல் கையேட்டினை வழங்கினார்.இதில் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.கண்டிகை அரசு உயர்நிலைப்பள்ளி, புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழா முடிவில் பிர்லா கார்பன் நிறுவன மனித வள மேலாளர் பெர்னாண்டஸ் நன்றி கூறினார்.

Tags : Training Program for School Students ,Kummidipoondi ,
× RELATED இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல்...