×

விசாரணைக்கு அழைத்து விடுவிப்பு விவகாரம் போலீசார் மீது கலெக்டரிடம் புரட்சிபாரதம் புகார்

திருவள்ளூர்,பிப் .18:       திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் சி.பி.குமார், ஒன்றிய தலைவர் எறையூர் எஸ்.பார்த்திபன், வக்கீல்கள் சுரேஷ், சி.சரவணன், பி.முனுசாமி ஆகியோர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு: பூண்டி ஒன்றியம் தோமூர் கிராமத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே  கடந்த ஜனவரி 16 ம் தேதி பிரச்னை ஏற்பட்டது. அப்போது எதிர் தரப்பினர் எங்களது சமூகத்தினரை அடித்தும், உதைத்தும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து  கனகம்மாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தோம். அதன் பேரில் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். இது சம்பந்தமாக கடந்த 12ம் தேதி சம்பவத்திற்கு காரணமான எதிர் தரப்பைச் சேர்ந்த 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களின் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் மீண்டும் திருப்பி அனுப்பி விட்டனர். எனவே, பிரச்னைக்கு காரணமான எதிர்த் தரப்பினரை கைது செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திருத்தணி போலீஸ் டிஎஸ்பி  மற்றும் கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.அப்போது சிவதாஸ், புருஷோத்தமன், மதுரை, திருவலாங்காடு சதாசிவம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Tags : collector ,revolution ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...