×

குரோம்பேட்டையில் திமுக சார்பில் மருத்துவ முகாம்

தாம்பரம், பிப். 18: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில், பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு திமுக மகளிரணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி துவக்கி வைத்தார். முகாமில் ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கப்படும் கண், ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை பார்வையிட்டார். இதில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.  தொடர்ந்து அங்கு கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொண்ட நோயாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடி மற்றும் மருந்து, மாத்திரைகளை எம்எல்ஏ கருணாநிதி வழங்கினார்.   இதில் அப்பகுதி திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK Medical Camp ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...