×

அனுமானத்தின் அடிப்படையில் பட்ஜெட் போடப்பட்டுள்ளது மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுப்பதில்லை: திமுக எம்எல்ஏ சுதர்சனம் பேச்சு

சென்னை : சட்டப்பேரையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மாதவரம் சுதர்சனம் (திமுக) பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வரும் முத்தலாக், குடியுரிமை திருத்த சட்டம் என்று அனைத்து சட்டங்களுக்கும் தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது.  ஆனால் மாநில அரசுக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து வரும் மத்திய அரசை எந்த கேள்வியும் கேட்பதில்லை. நிதி கேட்டு அழுத்தமும் கொடுப்பதில்லை. தனியார் பள்ளி கட்டணத்தை முறைப்படுத்த கலைஞர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட குழு தற்போது இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அமைச்சர் செங்கோட்டையன் : ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையில் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாதவரம் சுதர்சனம் : கடந்த 4 ஆண்டுகளாக 11  மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி முறையாக வழங்குவதில்லை. தற்போது இந்த பட்ஜெட்டில்  மடிக்கணினி வழங்க ₹960 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.

அமைச்சர் செங்கோட்டையன் : படித்து முடித்த பின்னர் வழங்குவதற்கு பதிலாக 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் போதே இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. மாதவரம் சுதர்சனம்: போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் தரப்படாமல் உள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை இந்த பட்ஜெட்டில் ₹1000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமையை காக்கும் வகையில் அரசு உடனடியாக தலையிட வேண்டும்
அமைச்சர் விஜயபாஸ்கர் : போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒரே தவணையாக ₹1090 கோடி நிலுவைத் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ₹927 கோடிதான் நிலுவைத் தொகை உள்ளது. மாதவரம் சுதர்சனம்: பொறியியல் படித்த மாணவர்களுக்கு தற்போது வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. கலைஞர் ஆட்சி காலத்தில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு ₹30 ஆயிரம் முதல்  ₹50 ஆயிரம் வரை மாத சம்பளத்தில் வேலை கிடைத்தது. தற்போது ₹8000 தான் ஊதியம் கிடைக்கிறது. இதனால் பலர் அவதிப்படுகின்றனர். மீனம்பாக்கம் - செங்கல்பட்டு, மாதவரம் - சோழவரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

Tags : state government ,MLA ,DMK ,
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...