குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு இருநிலைகளாக பிரிப்பு அறிவிப்பை வாபஸ் வாங்க வேண்டும்: ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

சென்னை: குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை இருநிலைகளாக பிரிக்கும் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஆகியவை நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இத்தகைய முறைகேடுகள் தொடர்வது இந்த அமைப்புகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையாக தண்டிப்பதில் தமிழக அரசு முழுமையாக தோல்வியை அடைந்துள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகள் நடத்துவது குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில், ஒருசில அறிவிப்புகள் தேர்வுகளை எழுதும் இளைஞர்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்குகிறது. இதுவரை ஒரேநிலைகொண்டதாக நடத்தப்பட்டு வந்த குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முதல்நிலை மற்றும் முதன்மைத்தேர்வு என இரண்டு நிலைகளாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி இந்த அறிப்பை உடனடியாக திரும்பப்பெற்று குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள ஒரே நிலை தேர்வாக நடத்திட வேண்டும். மேலும், சிரமத்திற்குள்ளாக்கும் அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: