×

உப்பு லோடு ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

நாமக்கல், பிப்.17:  தூக்தூக்குடியில் இருந்து லாரி ஒன்று 7 டன் உப்பு ஏற்றி கொண்டு, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை வீராசானூர் மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த சீனிவாசன்(32) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் மதியழகன் உடன் வந்துள்ளார். நேற்று காலை 9 மணியளவில் நாமக்கல் மாவட்டம் மதுரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதில், நிலைத்தடுமாறிய லாரி சாலையில் உள்ள தடுப்புகளை உடைத்து எதிர்புற சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர்செய்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : road accident ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு